Skip to main content

Posts

Showing posts from October, 2023

உன் புன்சிரிப்புக்காக

  தமிழ் மொழியில் சிறந்த சொல் எதுவென்று தேடினேன், கவி என்றால், அது பொய் உரைக்கின்றது என்றேன், காதல் என்றால், அது காக்க வைக்கிறது என்றேன், அன்பு என்றால், அது கிடைப்பதற்கு அரிது என்றேன், அழகு என்றால், அது பார்வையை பொறுத்து என்றேன். பின்பு எச்சொல் தான் சிறந்தது என்றாள், உன் பெயர் கூறும் அச்சொல்லே, எச்சொல்லிலும் சிறந்தது என்றேன். தமிழ் மொழியில் அச்சொல்லே இல்லை என்றால், பின்பு தமிழ் மொழியில் கவி எதற்கு என்றாள், வடக்கோடு தெற்கினுடைய நதிகள் தான் இணையவில்லையே, நம் காதல் மொழியாவது இணையுமா, என்று முயன்று பார்த்தேன் என்றேன்.

என் இணை பிரியாளுக்கு - 1

  உனை பற்றி எழுத சொல்லொன்று தேடினேன், சங்கம் வைத்து வளர்த்த செந்தமிழில் கிடைக்கும் என்றே நான் கண்ணயர்ந்தேன், அழகென்ற சொல்லில் உனை போற்ற எண்ணினேன் , மயில் தோகையும் அழகு என்றால், எச்சொல்லில் நான் அழைப்பேன் உன் இமை தோகையின் பேரழகை. அன்பென்ற சொல்லில் உன் குணம் போற்ற எண்ணினேன், இறைவன் கொண்டதும் அன்பென்றால், எச்சொல்லில் விவரிப்பேன் என் மீது நீ கொண்ட அளவற்ற காதலை. அறிவென்ற சொல்லில் உன் திறன் போற்ற எண்ணினேன், ஆசானே அறிவென்றால், எச்சொல்லில் விவரிப்பேன் நீ அமைக்கும் சக்ர வியூகங்களை. பண்பென்ற சொல்லில் உன் மனம் போற்ற எண்ணினேன், ஒழுக்கமே நற்பண்பு என்றால், எச்சொல்லில் விவரிப்பேன் நீ பழகும் விதம் தன்னை.

ஹைக்கூ புன்னகை

Photo Courtesy : anyrgb.com உன் புன்னகையின் மொழி எதுவென்று தேடினேன், இவ்வுலகம் போதவில்லை என்று அவ்வுலகமும் நான் சென்றேன், எவ்வுலகம் சென்றாலும் மொழி என்ன நானறியேன், கம்பன் படைத்த படைப்பின் மொழி தான் உன் மொழியோ, கேரளத்து பைங்கிளிகள் கூறும் மொழி தான் உன் மொழியோ, பிறை கடல் தாண்டி சிங்களத்து மொழி தான் உன் மொழியோ, வேதங்கள் படைத்த மொழி அம்மொழி தான் உன் மொழியோ, விண்ணவர்கள் பேசும் மொழி அம்மொழி தான் உன் மொழியோ, பிரம்மன் உனக்கென தனியாக மொழி படைத்தானோ, தமிழ் கூறும் நல்லுலகின் தலைநகரம் சென்றடைந்தேன், அங்கும் வினவினேன் எம்மொழி அது என்று, நான் வினவிய பொழுதினிலே எனக்கு கிடைத்த விடையானது, ஐயே அது சும்மா தமாஷு!

நீ இன்றி நானில்லை

Photo Courtesy : amazon.in நீ இன்றி நானில்லை, சொல்லின்றி மொழி இல்லை, நிறம் இன்றி மணம் இருந்தால், பூ கூட அழகில்லை, நீ இன்றி நான் இருந்தால், எனக்கென்றும் சிறப்பில்லை, உனை பற்றி எழுதும் கவி, உண்மை அன்றி வேறில்லை. இதழ் என்னும் சிப்பிக்குள், மறைத்து வைத்த முத்தெனவே, நீ உதிர்க்கும் புன்னகையை, நான் என்றும் போற்றிடுவேன், முத்துக்கள் சிதறிடவே, மொழி என்றும் நான் உரைப்பேன், புன்னகையில் உன் அழகை, மனத்தினிலே பூட்டிடுவேன். மெய் எழுத்தாய் நீ வந்தாய், நெற்றியிலே பொட்டிட்டு, உயிர் எழுத்தாய் நான் வந்தேன், என்னுயிர் நீ என்று, மெய்யாக உயிர் தந்தாய், நம் காதல் வாழ்வதற்கு, தமிழ் என்றும் போற்றிடுமே, நம் காதல் கவி என்று.