Skip to main content

ஹைக்கூ புன்னகை

Photo Courtesy : anyrgb.com


உன் புன்னகையின் மொழி எதுவென்று தேடினேன்,
இவ்வுலகம் போதவில்லை என்று அவ்வுலகமும் நான் சென்றேன்,
எவ்வுலகம் சென்றாலும் மொழி என்ன நானறியேன்,

கம்பன் படைத்த படைப்பின் மொழி தான் உன் மொழியோ,
கேரளத்து பைங்கிளிகள் கூறும் மொழி தான் உன் மொழியோ,
பிறை கடல் தாண்டி சிங்களத்து மொழி தான் உன் மொழியோ,
வேதங்கள் படைத்த மொழி அம்மொழி தான் உன் மொழியோ,
விண்ணவர்கள் பேசும் மொழி அம்மொழி தான் உன் மொழியோ,
பிரம்மன் உனக்கென தனியாக மொழி படைத்தானோ,

தமிழ் கூறும் நல்லுலகின் தலைநகரம் சென்றடைந்தேன்,
அங்கும் வினவினேன் எம்மொழி அது என்று,
நான் வினவிய பொழுதினிலே எனக்கு கிடைத்த விடையானது,
ஐயே அது சும்மா தமாஷு!

Comments

Popular posts from this blog

என் இனிய துணையாளுக்கு

நீ உதிர்த்த புன்னகையில், சூரியனும் குளிர்ந்திடுமே  மேகங்களை அழைத்து, மழையாலே தன் காதல் சொல்லிடுமே  நீ பேசும் வார்த்தையில், பைந்தமிழும் மகிழ்ந்திடுமே  கொஞ்சும் தமிழால், கவி மாலை தொடுத்திடுமே  நீ பார்க்கும் பார்வையில், சோலை வனமும் பூத்திடுமே  மனம் வீசும் பூக்களால், உன் கூந்தல் சூடி மகிழ்ந்திடுமே நீ இசைக்கும் இசை கேட்டு, மயில் கூட தோகை விரித்தாடிடுமே  அப்படியும் அழகில்லை, உன் முன் என்று உணர்ந்திடுமே உன் புன்னகை நான் காண, காடு மலை கடந்து வந்தேன்  மை ஒன்று கொண்டு வந்தேன், கண் பட்டு விடுமே என்று  மை வைத்த பின்பே உணர்ந்தேன், அது அழகுக்கு அழகு என்று  புன்னகையின் தேவதையே! உண்மையில் மச்சக்காரன், புரிந்தது நானே என்று  நீ பார்க்கும் கடை பார்வைக்கு, மின்மினிகள் பரிசளிப்பேன்  மின்மினிகள் மின்னவில்லை, நட்சத்திரம் முன்பு மின்மினிகள் என் செய்யும்  மையிட்டு மறைத்தாலும், மின்மினிகள் மின்னவில்லை  இவள் கண்களின் அழகுக்கு, நிகர் இந்த உலகில் ஏதுமில்லை ஒரு வார்த்தை கூறு, பிரபஞ்சத்தையே பரிசளிப்பேன்  கடல் கூட துள்ளாமல், ஒரு கணம் நிறுத்தி வைப்பே...

मेरी प्यार की मल्लिका

सूरज की रोशनी से चमकती है तेरी सूरत  मेरी दिल ने बोला, तुजसे कौन है खूबसूरत  तू मुझे मिली थो, और क्या पाना है इस जग में  सपनों में तुम्ही हो, देख लो नींद की गहराईयों में  दिल मत थोड़ो, किसी से बात करके  प्यार ना मांथी, कोशिश कर लिया बात करके  तुज से थो ज्यादा प्यार करनेवाली कोई नहीं  सच बोलता हूँ, फिर भी किसी और बीवी से पूछना नहीं  खुवाईश है रकलूँ तुम्हे पास हमेशा  इसी लिए पैदा हूँ, और क्या है इरादा  तुह है वोह तारे जो चमकती है चाँद जैसा  सब दुआ में तू है, देख लो अल्लाह के मस्जिद पे हमेशा  तू है मेरी बेगम जिसे करता हूँ प्यार जैसा  की चाँद बी बोले, हमें बी प्यार करना वैसे की वैसा  तुम्हारे गुण देकके थो, दिल ने बोला  मिल गयी मेरी बेगम इ मल्लिका 

जीयो दिल से