நீ உதிர்த்த புன்னகையில், சூரியனும் குளிர்ந்திடுமே மேகங்களை அழைத்து, மழையாலே தன் காதல் சொல்லிடுமே நீ பேசும் வார்த்தையில், பைந்தமிழும் மகிழ்ந்திடுமே கொஞ்சும் தமிழால், கவி மாலை தொடுத்திடுமே நீ பார்க்கும் பார்வையில், சோலை வனமும் பூத்திடுமே மனம் வீசும் பூக்களால், உன் கூந்தல் சூடி மகிழ்ந்திடுமே நீ இசைக்கும் இசை கேட்டு, மயில் கூட தோகை விரித்தாடிடுமே அப்படியும் அழகில்லை, உன் முன் என்று உணர்ந்திடுமே உன் புன்னகை நான் காண, காடு மலை கடந்து வந்தேன் மை ஒன்று கொண்டு வந்தேன், கண் பட்டு விடுமே என்று மை வைத்த பின்பே உணர்ந்தேன், அது அழகுக்கு அழகு என்று புன்னகையின் தேவதையே! உண்மையில் மச்சக்காரன், புரிந்தது நானே என்று நீ பார்க்கும் கடை பார்வைக்கு, மின்மினிகள் பரிசளிப்பேன் மின்மினிகள் மின்னவில்லை, நட்சத்திரம் முன்பு மின்மினிகள் என் செய்யும் மையிட்டு மறைத்தாலும், மின்மினிகள் மின்னவில்லை இவள் கண்களின் அழகுக்கு, நிகர் இந்த உலகில் ஏதுமில்லை ஒரு வார்த்தை கூறு, பிரபஞ்சத்தையே பரிசளிப்பேன் கடல் கூட துள்ளாமல், ஒரு கணம் நிறுத்தி வைப்பே...

Comments
Post a Comment