நீ பேசும் மொழி கண்டு சற்று உலகத்தை நிறுத்தினேன் பதில் கூற அல்ல, கவிதை புனைய எழுதவில்லை உற்று பார்த்தேன் ஆமாம் கவிதை தான் அது . சரி ஏட்டிலாவது கவிதை , புனைந்து விடலாம் என்று எண்ணினேன் , கவிதை தான் எழுதினேன் , கண்ணாடியில் அது ஓவியம் ஆனது .
சூடி நீ கொடுத்தது மலரையா ? மலர்ந்த என் புன்னகையையா ? சூடி நீ கொடுத்தது அழகையா ? கள்ளழகரின் கள்ளமில்லா அழுகையா ? சூடி நீ கொடுத்தது மாலையையா ? இரு மனமும் சேரும் மண மாலையையா ? சூடி நீ கொடுத்தது உன்னையா ? கண்ணாடியில் தெரிந்த நம்மையா ?