உனை பற்றி எழுத சொல்லொன்று தேடினேன்,
சங்கம் வைத்து வளர்த்த செந்தமிழில்
கிடைக்கும் என்றே நான் கண்ணயர்ந்தேன்,
அழகென்ற சொல்லில் உனை போற்ற எண்ணினேன் ,
மயில் தோகையும் அழகு என்றால்,
எச்சொல்லில் நான் அழைப்பேன்
உன் இமை தோகையின் பேரழகை.
அன்பென்ற சொல்லில் உன் குணம் போற்ற எண்ணினேன்,
இறைவன் கொண்டதும் அன்பென்றால்,
எச்சொல்லில் விவரிப்பேன்
என் மீது நீ கொண்ட அளவற்ற காதலை.
அறிவென்ற சொல்லில் உன் திறன் போற்ற எண்ணினேன்,
ஆசானே அறிவென்றால்,
எச்சொல்லில் விவரிப்பேன்
நீ அமைக்கும் சக்ர வியூகங்களை.
பண்பென்ற சொல்லில் உன் மனம் போற்ற எண்ணினேன்,
ஒழுக்கமே நற்பண்பு என்றால்,
எச்சொல்லில் விவரிப்பேன்
நீ பழகும் விதம் தன்னை.

Comments
Post a Comment