Skip to main content

உன் புன்சிரிப்புக்காக

 


தமிழ் மொழியில் சிறந்த சொல் எதுவென்று தேடினேன்,
கவி என்றால், அது பொய் உரைக்கின்றது என்றேன்,
காதல் என்றால், அது காக்க வைக்கிறது என்றேன்,
அன்பு என்றால், அது கிடைப்பதற்கு அரிது என்றேன்,
அழகு என்றால், அது பார்வையை பொறுத்து என்றேன்.

பின்பு எச்சொல் தான் சிறந்தது என்றாள்,
உன் பெயர் கூறும் அச்சொல்லே,
எச்சொல்லிலும் சிறந்தது என்றேன்.

தமிழ் மொழியில் அச்சொல்லே இல்லை என்றால்,
பின்பு தமிழ் மொழியில் கவி எதற்கு என்றாள்,
வடக்கோடு தெற்கினுடைய
நதிகள் தான் இணையவில்லையே,
நம் காதல் மொழியாவது இணையுமா,
என்று முயன்று பார்த்தேன் என்றேன்.

Comments

Popular posts from this blog

என் இனிய துணையாளுக்கு

நீ உதிர்த்த புன்னகையில், சூரியனும் குளிர்ந்திடுமே  மேகங்களை அழைத்து, மழையாலே தன் காதல் சொல்லிடுமே  நீ பேசும் வார்த்தையில், பைந்தமிழும் மகிழ்ந்திடுமே  கொஞ்சும் தமிழால், கவி மாலை தொடுத்திடுமே  நீ பார்க்கும் பார்வையில், சோலை வனமும் பூத்திடுமே  மனம் வீசும் பூக்களால், உன் கூந்தல் சூடி மகிழ்ந்திடுமே நீ இசைக்கும் இசை கேட்டு, மயில் கூட தோகை விரித்தாடிடுமே  அப்படியும் அழகில்லை, உன் முன் என்று உணர்ந்திடுமே உன் புன்னகை நான் காண, காடு மலை கடந்து வந்தேன்  மை ஒன்று கொண்டு வந்தேன், கண் பட்டு விடுமே என்று  மை வைத்த பின்பே உணர்ந்தேன், அது அழகுக்கு அழகு என்று  புன்னகையின் தேவதையே! உண்மையில் மச்சக்காரன், புரிந்தது நானே என்று  நீ பார்க்கும் கடை பார்வைக்கு, மின்மினிகள் பரிசளிப்பேன்  மின்மினிகள் மின்னவில்லை, நட்சத்திரம் முன்பு மின்மினிகள் என் செய்யும்  மையிட்டு மறைத்தாலும், மின்மினிகள் மின்னவில்லை  இவள் கண்களின் அழகுக்கு, நிகர் இந்த உலகில் ஏதுமில்லை ஒரு வார்த்தை கூறு, பிரபஞ்சத்தையே பரிசளிப்பேன்  கடல் கூட துள்ளாமல், ஒரு கணம் நிறுத்தி வைப்பே...

நீ இன்றி நானில்லை

Photo Courtesy : amazon.in நீ இன்றி நானில்லை, சொல்லின்றி மொழி இல்லை, நிறம் இன்றி மணம் இருந்தால், பூ கூட அழகில்லை, நீ இன்றி நான் இருந்தால், எனக்கென்றும் சிறப்பில்லை, உனை பற்றி எழுதும் கவி, உண்மை அன்றி வேறில்லை. இதழ் என்னும் சிப்பிக்குள், மறைத்து வைத்த முத்தெனவே, நீ உதிர்க்கும் புன்னகையை, நான் என்றும் போற்றிடுவேன், முத்துக்கள் சிதறிடவே, மொழி என்றும் நான் உரைப்பேன், புன்னகையில் உன் அழகை, மனத்தினிலே பூட்டிடுவேன். மெய் எழுத்தாய் நீ வந்தாய், நெற்றியிலே பொட்டிட்டு, உயிர் எழுத்தாய் நான் வந்தேன், என்னுயிர் நீ என்று, மெய்யாக உயிர் தந்தாய், நம் காதல் வாழ்வதற்கு, தமிழ் என்றும் போற்றிடுமே, நம் காதல் கவி என்று.

जीयो दिल से